அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என அக்கட்சியினர் உட்பட சில நிர்வாகிகளின் கோரிக்கை தற்போது அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 14ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை எழுந்த பின் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும்தனித்தனியேதனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர். நேற்று அதிமுகவின்ஒருங்கிணைப்பாளரானஓ.பி.எஸ். ஒற்றைத் தலைமை தேவையற்றது என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலைபொன்னையன், ஆர்.பி. உதயகுமார், வைகை செல்வன், செம்மலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துஆலோசனைநடத்தினர்.

Advertisment