Advertisment

"வழக்கு காத்து மேல போடுங்க"...சுபஸ்ரீ விஷயத்தில் திமிராக பேசிய அதிமுக பொன்னையன்!

முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ வாகனத்தின் மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி, அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த பேனர் வைக்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபாலை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர்.

Advertisment

admk

இந்நிலையில் கிருஷ்ணகிரி தேன்கனிகோட்டையில் வைத்து தனிப்படை போலீசார் ஜெயகோபாலை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் இந்த சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கேட்ட போது, காற்றடித்து பேனர் விழுந்துள்ளது. பேனர் வைத்தவரா அதனை தள்ளிவிட்டு சுபஸ்ரீயைக் கொன்றார். வழக்குத் தொடுப்பதாக இருந்தால் காத்து மீது தான் கேஸ் போட வேண்டும் என்று கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் இப்படி பேசியது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
admk banners Ponnaiyan public issues subasri
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe