admk

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Advertisment

இதனையடுத்து கரோனாகாலத்தில் சிறைக்குள் இருந்தபடியே சசிகலாவும் பல்வேறு அரசியல் திட்டங்களைப் போட்டு வருவதாகச் சொல்கின்றனர். இந்தக் கரோனா காலத்தில் அவரை யாரும் சந்திக்கவே இல்லை. அதனால் வாக்கிங், பூஜை, மருந்து மாத்திரை எனஅவர் தனியாவே இருந்தார் என்று கூறுகின்றனர். ஆனாலும் அவர் மனம் அரசியல் கணக்குகளைப் போட்டபடியேதான் இருப்பதாக,அவர் தரப்பிலிருந்து கூறிவருகிறார்கள். இந்த நிலையில் வரும் 15-ஆம்தேதியில் இருந்து கர்நாடக அரசு, சிறைக் கைதிகளை விசிட்டர்கள் பார்க்கலாம் என்று சொல்லியிருப்பதால், அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்கள் சிலர், அன்று சசிகலாவைச் சந்தித்து, தங்கள் ஆதரவைத் தெரிவிக்க ரெடியாக இருப்பதாகச் சொல்கின்றனர்.