ADVERTISEMENT

கட்சி மாறிய அதிமுகவின் முக்கிய தளபதிகள்... அமைச்சர் மீது அதிருப்தி... அதிர்ச்சியில் அதிமுக!

11:18 AM Nov 26, 2019 | Anonymous (not verified)

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி அ.தி.மு.க.வின் தெற்கு மா.செ.வுமான எஸ்.பி.சண்முக நாதனின் உடன்பிறந்த தம்பி எஸ்.டி.ஜார்ஜ் மற்றும் அவரது அண்ணன் மகனான சுந்தர் ராஜ் இருவரும் அ.தி.மு.க. விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வில் ஹைவோல்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க.வின் மா.செ.வும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் மூலமாக அவர்கள் இணைந்துவிட்டார்கள்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


மாஜி அமைச்சர், மா.செ., கட்சியின் செல்வாக்கான புள்ளியான சண்முகநாதனுக்கு சகலமும் இந்த இருவர்தான். என்னதான் அரசியலில் வளம், வளர்ச்சி போன்றவற்றில் உச்சம் கண்டாலும் சண்முகநாதன் இவர்களை கருவேப்பிலையாகவே பயன்படுத்தி வந்தது இவர்களுக்குள் கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர, உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுகளின் வேட்பாளர்கள் சீட் ஒதுக்கும் விவகாரத்தில் இவர்களிடம் அ.தி.மு.க.வின் விசுவாசிகளே புலம்பியது மட்டுமல்லாமல், அண்மைக்கால மாக அவரது நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாறுதல்களும் தளபதிகளுக்குப் பிடிக்காமல் போனது. சுந்தர்ராஜனிடம் நாம் கேட்ட போது... "பிறகு பேசுகிறேனே'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT