Advertisment

சிரிச்சா பேசுற பதவிக்கு வேட்டு வைக்கிறேன்... நாங்களும் நட்பா இருப்போம்ல... அதிமுக, திமுகவின் புதிய ஸ்டைல்! 

ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருந்தாலும் சரி, தி.மு.க. இருந்தாலும் சரி... இரு கட்சிகளின் வி.ஐ.பி.களுக்குள் ரகசிய டீலிங்குகள், பண பரிவர்த்தனைகள் நடந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் பொதுவெளிகளில் ஒருவருக்கொருவர் சந்திக்க நேர்ந்தால், தலை தெறிக்க ஓடுவார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, "அம்மா நம்ம அமைச்சர் ஒருத்தரும் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருத்தரும் ரொம்ப நட்பா இருக்காங்க. நம்ம மா.செ.வும் தி.மு.க. மா.செ.வும் ஒரு கல்யாண வீட்ல சிரிச்சு சிரிச்சுப் பேசுனத என் கண்ணால பார்த்தேம்மா'’என போட்டுக் கொடுப்பதற்கென்றே ஒரு கோஷ்டி இருக்கும்.

Advertisment

admk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

"சிரிச்சா பேசுறான் உடனே பதவிக்கு வேட்டு வைக்கிறேன்'’என தடாலடி காட்டுவார் ஜெ. ஆனால் இப்போது எடப்பாடி ஆட்சியில் அந்தளவுக்கு கெடுபிடி இல்லாதது இரு கட்சிகளின் வி.ஐ.பி.க்களுக்கு ரொம்பவே வசதியாக போய் விட்டது. அதற்கு லேட்டஸ்ட் உதாரண சம்பவங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் தலா 3 தொகுதிகளில் ஜெயித்து, ஆளும் கட்சிக்கு ஒன்றுமே கிடைக்காமல் போனதால் ரொம்பவே கடுப்பானார் ஜெ. அதனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு தி.மு.க., காங். எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது, போராட வேண்டியிருந்தது. ஆனால் இப்போதோ எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

Advertisment

admk

கடந்த வாரம் ராஜாக்கமங்கலத்தில் மின்சார வாரியத்தின் சப்-டிவிஷன் திறப்பு விழா நாளில் தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜனுக்காக கலெக்டர் பிரசாந்த் வடநேரே காத்திருந்து, அவர் வந்த பின்தான் சப்-டிவிஷன் திறக்கப்பட்டது. அதேபோல் பூதபாண்டி கோவில் தேரோட்டத்தை தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டினும் அ.தி.மு.க. மா.செ. அசோகனும் சேர்ந்து வடம்பிடித்து துவக்கி வைத்தனர். இதற்கடுத்து நாகர்கோவில் மாநகராட்சியில் நடந்த வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் தளவாய்சுந்தரமும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக கலந்துகொண்டதோடு கூட்டாக பேட்டி கொடுத்தனர்.

"நாங்களும் நட்பா இருப்போம்ல' என களத்தில் குதித்த காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரும் மாவட்ட அதிகாரிகளுடனும் தளவாய்சுந்தரத்துடனும் நெருக்கம் காட்டிவருகிறார்.

இதையெல்லாம் பார்த்த ரஜினி மக்கள் மன்ற மா.து.செ. ஆர்.எஸ்.ராஜன் நம்மிடம் பேசும் போது, அவர்களுக்குள் கூட்டணி போட்டு, மக்கள் பிரச்சனைகளை மறந்துவிட்டார்கள்என்றார். இன்னும் ஒரு வருஷத்துல எலெக்ஷன் வரப்போகுது. இப்ப ஃப்ரண்டா இருந்து காரியம் சாதிச்சாதான் கட்சிக்காரனுக்கு செலவுபண்ண முடியும்'' என்கிறார் பத்மனாபபுரம் தி.மு.க. புள்ளி ஒருவர்.

அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரோ, “எதிர்க்கட்சிக் காரங்களை பகைச்சுக்கிட்டா அடிக்கடி போராட்டம் பண்ணி குடைச்சல் கொடுப்பாங்க. அது தேர்தல் சமயத்துல பாதிக்கும். அதுக்குத் தான் இப்படி'' என்கிறார்.

Meeting Speech politics admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe