Advertisment

ஸ்டாலினை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம்: அன்புமணி

சென்னை தி.நகரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,

Advertisment

அதிமுக - பாமக கூட்டணி பண நல கூட்டணி என்று ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? என்ற கேள்விக்கு,

anbumani ramadoss

இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் அனைவரும் எங்களை அணுகினார்கள் திமுக உள்பட. இது ஒரு தேர்தலில் இயல்பு. கட்சி நிர்வாகிகள், பெரும்பாலான தொண்டர்கள் ராமதாஸிடம் அதிமுக கூட்டணிக்கு செல்லலாம் என்று வலியுறுத்தினார்கள். அந்த அடிப்படையில்தான் ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு சென்றது காரணம். ஸ்டாலின் எங்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஒருவேளை அவர்களுடன் நாங்கள் செல்லவில்லை என்ற காரணத்தினால் இப்படி விமர்சனம் செய்யலாம். எங்கள் அணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று அவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். அந்த தோல்வி பயத்தாலும் எங்கள் மீது அவதூறுகளை வீசிக்கொள்ளலாம். ஆனால் நாங்கள் அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம். இவ்வாறு கூறினார்.

anbumani ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe