ADVERTISEMENT

கூட்டணி கட்சிகளை கழட்டி விட அதிமுக முடிவு?

03:18 PM Jun 14, 2019 | Anonymous (not verified)

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் தனது ஓட்டு வங்கியையும் 20 சதவிகிதத்துக்கு மேல் இழந்தது.தோல்வி பற்றி அதிமுகவில் பலவிதமான கருத்துகளும்,சர்ச்சைகளும் கிளம்பின.அதில் பெரும்பாலான அமைச்சர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தோல்விக்கு காரணம் என்று கூறினர்.இன்னும் சிலர் பாமக,தேமுதிக இரண்டு கட்சி தொண்டர்களும் அவர்கள் கட்சியின் மீது இருக்கும் அதிருப்தியில் சரியாக களப்பணி செய்யவில்லை அதனால் தான் படுதோல்வி அடைந்தோம் என்றும் கூறிவருகின்றனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


ஆகையால் வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று அதிமுக கட்சி நிர்வாகிகள் அதிமுக தலைமைக்கு கூறியதாக தெரிகிறது. அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை,இரட்டை தலைமை பிரச்னை வெடித்ததால் உள்ளாட்சி தேர்தலில் இந்த பிரச்னை பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசித்து வருகிறதாம்.இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை கூட்டணி இல்லாமல் தனது கட்சியின் சொந்த பலத்தை வைத்து போட்டியிடலாம் என்று ஆலோசனையில் இருப்பதாக தெரிகிறது.அப்போது தான் கட்சியின் பலத்தை அதிகரிக்க முடியும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT