Advertisment

மாவட்டச் செயலாளர்களுடன் ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். ஆலோசனை! (படங்கள்)

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இன்று (09/07/2021) மாலை 05.00 மணிக்கு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். தேர்தல் முடிவுக்குப் பிறகு நடைபெறும் முதலாவது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலருடன் சசிகலா தொடர்ந்து பேசி வருவது குறித்தும், உள்ளாட்சித் தேர்தல், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளிடம் ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகின்றன.

Advertisment

இதனிடையே, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, ஒற்றைத்தலைமை என அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

admk discussion edappadi pazhaniswamy OPANEER SELVAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe