அம்மா பேரவை இணைச் செயலாளராக வா.புகழேந்தி நியமனம்!

admk party eps and ops announced

அ.தி.மு.க. கட்சியின் அம்மா பேரவை இணைச் செயலாளராக வா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. கட்சியின் அம்மா பேரவை இணைச் செயலாளராக வா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளராக ரவீந்திரஜெயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கிட கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admk ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe