நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செந்தில்பாலாஜியும், தங்க தமிழ்ச்செல்வனும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அதே போல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர். சமீபத்தில் இது குறித்து பேசிய தினகரன், அதிமுக-வுக்கு சென்ற மூன்று எம்.எல்.ஏக்களும் என்னிடம் சொல்லிவிட்டுதான் அதிமுகவில் இணைந்தனர் என்று கூறியுள்ளார். இதனால் ஸ்லீப்பர் செல்கள் இன்னும் கட்சிக்குள் இருந்து சில தகவல்களை வெளியே கூறுகின்றனர் என்று அதிமுக தலைமைக்கு சந்தேகம் வந்ததாக சொல்லப்படுகிறது.