சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட தனது தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அறிவித்தார். இந்நிகழ்வில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர். இன்று காலை எடப்பாடி பழனிசாமி தனது தரப்பு வேட்பாளரை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.