தேர்தல் வரும் போது, யார் காணாமல் போவார்கள் என்று பார்ப்போம்: எடப்பாடிக்கு விஜயகாந்த் பதிலடி!

தேர்தல் வரும் போது, யார் காணாமல் போவார்கள் என்று பார்க்கத்தான் போகிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று இரவு, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று கமல் கட்சி ஆரம்பித்துவிட்டார். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் தெரியவில்லை. கேட்பவர்களுக்கும் புரியவில்லை.

ஏற்கனவே விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். தற்போது பல நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வர் பதவிக்கு கனவு காணுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் விஜயகாந்த் போன்று காணாமல் போவார்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று, வேலூர் மாவட்டம் அரியூறில் நடைபெற்ற கட்சி பிரமுகரின் திருமண விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கூடிய விரைவில் தேர்தல் வரும். அப்போது யார் காணாமல் போவார்கள் என்று பார்க்கலாம். தேமுதிக கட்சிகாரர்களா அல்லது அதிமுக கட்சிகாரர்களா என அப்போது பார்ப்போம் என கூறியுள்ளார்.

Dmdk vijayakanth eps
இதையும் படியுங்கள்
Subscribe