admk ops supporter pugalenthi talks about annamalai  

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுகவின் செய்தி தொடர்பாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "அண்ணாமலை, ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி, ஜெயலலிதாவை விட தனது மனைவி நூறு மடங்கு உயர்ந்தவர் என்றும், தனது தாயார் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்என்றும் பேசி இருந்தார். இவ்வாறு பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

இவ்வாறு பேசி வரும் அண்ணாமலையை ஏற்கனவே பல தலைவர்கள் உளவியல் ரீதியாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி வரும்நிலையில் அதனைஉறுதிப்படுத்தும் விதமாக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். எனவே அண்ணாமலை நல்ல மனநல மருத்துவமனையையோ, மனநல மருத்துவரையோஅணுகுவது நல்லது. மேலும் தொடர்ந்து இவ்வாறு விமர்சன ரீதியில் பேசுவதைநிறுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

Advertisment

எடப்பாடி பழனிசாமி தலைமையிலானஅதிமுக தொடர்ந்து தேர்தல்களில் தோல்விகளை சந்தித்து வருவதற்கு காரணம் அவர்களது நடவடிக்கைகளும், மக்களின் எதிர்ப்பும்தான்" என பேசினார்.