நாடு முழுவதும் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சியினர் தங்களது முடிவுகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதேபோல் அக்கட்சியினர் இன்று காலை சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் இனிப்புகள் மற்றும் பட்டாசுகளுடன் தயாராக உள்ளனர். அங்கிருப்பவர்கள் தங்களது செல்போனில் முன்னிலை நிலவரம் குறித்து பார்த்து வருகின்றனர். எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தனர்.