இன்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். திமுக மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். அப்போது தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கூறியது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இது ஆளும் கட்சியான பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பதவி பிரமாணம் செய்யும் போது திமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள் கூறியது போல் தமிழ் வாழ்க என்று சொல்லாமல் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என கூறியதன் மூலம் பாஜகவினரை வெறுப்பேற்றக் கூடாது, அதிருப்தியடைய வைக்கக் கூடாது என்பதில் ஓபிஎஸ் மகன் தெளிவாக இருந்தார் என்று கூறுகின்றனர்.

Advertisment

admk

மேலும் முதல் நாளே பாஜகவினரை வெறுப்படையும் படி செய்தால் அமைச்சர் விரிவாக்கத்தின் போது அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு பறி போகும் என்பதால் மிக கவனமாக பதவி ஏற்றார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.அதோடு தமிழக மக்களையும் பகைத்து கொள்ளாமல் தமிழில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.இதனால் தனது அரசியல் மூவ்களை கவனமாக எடுத்து வைக்கிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.