அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற பேச்சு ஆரம்பித்தவுடன் எம்எல்ஏக்களை சமாதானம் செய்து, தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் இதுபோன்று நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது திமுக. ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த பிரமுகர்கள் மூலம் ஆளும் கட்சியினருக்கு வலை வீசுகிறது திமுக.

Advertisment

eps

Advertisment

இதனை உளவுத்துறை மூலம் அறிந்த எடப்பாடி பழனிசாமி, திமுகவில் இருந்து யார் அதிமுக எம்எல்ஏவிடம் பேசுவது என விசாரித்துள்ளார். அப்போது செந்தில்பாலாஜி உள்பட ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவுக்கு சென்றவர்கள் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து திமுக பக்கம் பேசி வரும் அதிமுக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு, உங்கள் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வரும்போது ஏன் தேவையில்லாமல் அந்தப் பக்கம் பேச வேண்டும். செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றார் என்றால், பதவி இல்லாதபோது சென்றார், அதனால் அவர்கள் பதவி கொடுத்து, தேர்தலில் நிற்க வைத்தார்கள். அதோடு மட்டுமல்ல தேர்தலுக்கு செந்தில்பாலாஜி தனக்கு தானே செலவு செய்தார். நீங்கள் அப்படி சென்றால் கட்சி பதவி கிடைக்கும் என நினைக்கிறீர்களா? இல்லை தேர்தலில் மீண்டும் உங்களுக்கு வேட்பாளராக நிற்க வாய்ப்பு வரும் என நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை வேறு தேவைகளுக்காக போய்விட்டால் ஆட்சியில் இருப்பவர்கள் சோதனை செய்ய மாட்டார்களா என்று பேசி சமாதானப்படுத்தி வருகிறார்களாம்.