Skip to main content

ரஜினியுடன் அதிமுக அமைச்சர்கள்... ஈஸ்வரன் பேச்சால் பரபரப்பு... அலெர்ட்டான எடப்பாடி!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியல் அறிவித்திருந்தார். அதேபோல் 234 தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த நடிகர் ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்வேன் என்று கூறினார். மதம், சாதி வேறுபாடு இல்லாத அரசியலாக இருக்கும் என்றும் சிஸ்டம் சரியில்லை என்றும் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் ரஜினி புதிய கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று பேசி வருகின்றனர். அப்போது மதுரையில் பெரிய மாநாடு மாதிரி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அப்போது கட்சியின் பெயர், கொடியை, ரஜினி அறிமுகம் செய்வார் என்றும் கூறுகின்றனர். 
 

rajiniஇந்த நிலையில் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் ரஜினியின் கட்சியில் சேர ஒரு சில அமைச்சர்கள் தயாராக இருப்பதாகவும், தற்போது ரஜினிக்கு ஆதரவாக பேசி வருபவர்கள் நிச்சயம் அவர் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சிகள் சேருவார்கள் என்றும் அதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈஸ்வரனின் இந்த பேச்சால் அதிமுகவில்  பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எந்த அமைச்சர்கள் ரஜினியிடம் தொடர்பில் இருக்கிறார்கள் என்று எடப்பாடி கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.  

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'தமாகா நிர்வாகிகள் ராஜினாமா செய்வதன் காரணம் இதுதான்'-விளக்கம் கொடுத்த விடியல் சேகர்  

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Vidyal Shekhar explains 'resignation is for party reform

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப வேண்டும். மாதாந்திர கட்டணத்தை மாற்றி மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் மின்சார துறையில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர், 'தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருவது குறித்த சர்ச்சைக்கு, கட்சியின் நிர்வாக சீரமைப்பிற்காக அவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை என்பது கட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறையில் உள்ள இயல்பான ஒன்று என்பதால் இதில் அரசியல் எதுவும் இல்லை என கூறிய அவர், புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜி.கே.வாசன் விரைவில் வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.

Next Story

ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தாங்கள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ஏழு நாட்கள் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற நடுவர் பரத்குமார் இரண்டு நாட்கள் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.