தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை அதிமுக பக்கம் கொண்டு வரும் வேளையில் எடப்பாடி ஒரு டீமை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் முக்கியமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் இந்த களத்தில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் தினகரன் அறிவித்த அறிக்கையின் போது, தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ தர வரிசைப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கம் முதலே மருத்துவ மாணவர் சேர்க்கையில் நிலவி வரும் குளறுபடிகளின் உச்சமாக நிகழ்ந்திருக்கும் இத்தவறை தமிழக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.

Advertisment

ammk

இதை எல்லாம் கவனிக்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர், தனது கட்சிக்கு ஆள் பிடிக்கிற வேலையில் மும்முரமாக இருக்கிறார். ஆளும் அரசும், அமைச்சரும் இப்படி இருக்கும் போது 'நமக்கென்ன?' என்று அதிகாரிகளும் தமிழக மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என தினகரன் கூறியுள்ளார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரத்தில் அதிமுகவிற்கு தான் எங்களது முழு ஆதரவு என்று கூறினர்.மேலும் தாங்கள் அதிமுகவிற்கு வருவதற்கு காரணம் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் தினகரனின் இந்த அறிக்கை அமைச்சர் விஜயபாஸ்கரை தாக்கும் வண்ணம் உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.