முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் பதவிக்கு எதிராக யாரும் கட்சியில் உருவாகி விடக்கூடாது என்று கவனமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே கட்சிப் பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடிக்கு எதிராக முணு முணுக்கிறார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. இப்போது ஓரங்கட்டப்பட்டிருக்கும் விஜயபாஸ்கரும், எடப்பாடிக்கு உரிய பாடம் புகட்டும் நேரத்திற்காகக் காத்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள்இருவருக்கும்பொது எதிரியான அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு எடப்பாடி அதிக முக்கியத்துவம் கொடுப்பது,மேற்கண்ட இரண்டு அமைச்சர்களையும் கடுப்பாக்கியிருப்பதாகக் கூறுகின்றனர் ர.ர.க்கள் .

admk

Advertisment

இதே போல் மேலும் சில அமைச்சர்கள் எடப்பாடிக்கு எதிரான கருத்துக்களைப் பரவவிட்டு, வேடிக்கை பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.மேலும் கோட்டைக்குள் அமைச்சர்களின் கோஷ்டி-வைரஸ் பரவுவதை அறிந்த எடப்பாடி, இவர்களின் பின்னணியில் அ.ம.மு.க. தினகரன் இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.