eps

Advertisment

மத்தியில் கூட்டணி அரசு அமைவதுபோல், தமிழகத்திலும் வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும். அ.தி.மு.க.வுக்கு முதல்வர் பதவி என்பதுபோல், பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவியைக் கொடுக்க வேண்டும் என டெல்லித் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

இது ஒரு பக்கம் எடப்பாடியை திகைக்க வைத்திருக்கிறது என்றால், இன்னொரு பக்கம், எடப்பாடியை அவர் அமைச்சரவையில் இருக்கும் கொங்கு மந்திரிகளே திகைக்க வைக்கிறார்களாம்.

தமிழக முதல்வரா எடப்பாடி இருந்தாலும், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை ஆக்டிங் முதல்வரா இருந்து ஆட்டிவைக்கிறவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிதானாம். அந்தபகுதியில் இருக்கும் ஆளும்கட்சிப் புள்ளிகளைத் தன் கைவசம் வைத்திருக்கும் அவர், நீங்க கோவைப் பகுதிக்கே வரத் தேவையில்லைன்னு எடப்பாடிக்கே பிரேக் பிடிக்க முனைகிறாராம். இருந்தாலும், அவ்வப்போது கோவைப் பகுதிக்கு விசிட்டடித்து, தன் பவரை ரீஃப்ரஷ் செய்துகொண்டு வருகிறாராம் எடப்பாடி.

Advertisment

அதேபோல் தனது கணக்கு வழக்குகளை கவனிக்க வேலுமணி 40 பேரை பி.ஏ. லெவலில் வைத்திருக்கிறார் என்ற தகவலைக் கேட்டும் கிறுகிறுத்துபோயிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதேபோல், பவர் துறை மந்திரி, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யை நியமித்தது தொடங்கி டாஸ்மாக் எம்.டி.யாக மோகன் ஐ.ஏ.எஸ்.சை நியமித்தது வரை அனைத்திலும் தன் பவரைக் காட்டி, அனைவரையும் பயமுறுத்துகிறாராம் என்று அதிமுக மேலிட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.