கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கபாலீஸ்வரர் அம்மன் கோவிலிலும், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலிலும் கடந்த 20-ஆம் தேதி சிறப்பு அபிஷேகங்கள் -அர்ச்சனைகள் -ஆராதனைகள் நடந்தன. பஸ்நிலையத்தில் தட்டு தட்டாக இனிப்பு வகைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கடலூர் ஒன்றிய சேர்மன் பக்கிரி தலைமையில் மாவட்ட ஜெ.பேரவை சுப்பிரமணியன், பொதுக்குழு காமராஜ், அவைத்தலைவர் ஜெயகாந்தன், எக்ஸ் சேர்மன் குமார் என கட்சி முன்னோடிகள் பலரும் பங்கேற்றனர்.

Advertisment

தாமரைக்குளம் ஹெல் பேஜ் இந்தியா முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. அன்று முழுவதும் கடலூர் பகுதியில் பரபரப்பான விழாவாக நடத்தப்பட்டது. இதைக்கண்டு பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் பரபரப்பாக பேசிக் கொண்டனர் .

Advertisment

admk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கடலூர் மாவட்ட மந்திரியும் கட்சியின் மா.செ.வுமான எம்.சி.சம்பத்தின் மகன் பிரவீன் பிறந்தநாள் அலப்பறைகள்தான் இத்தனையும். சம்பந்தப்பட்ட பிரவீன் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. ஆதரவாளர்கள்தான் கடலூரை அமர்க்களப்படுத்தினர்.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியினர், "அமைச்சரின் வாரிசு வருங்காலத்தில் அரசியல் களத்தில் பிரவேசிக்கப் போகிறார். அதற்கான முன்னோட்டம்தான் இது''’என்றனர். மேலும், ’அமைச்சரைவிட, அவரது மகன் பிரவீன் பிறந்தநாளைத்தான் சிறப்பாக கொண்டாடுகிறோம். அதற்கு முக்கிய காரணம்... கட்சிக் காரர்களின் வீட்டு விசேஷங்களில் தவறாமல் கலந்துகொள்வார் பிரவீன். அதோடு அன்பளிப்புகளையும் தாராளமாக வழங்கி அசத்துவார்''’என்கிறார்கள்.

பிரவீன் அரசியல் பிரவேசத்திற்கு அமைச்சரின் மறைமுக ஆதரவும் பலமாக உள்ளதாம்.

"உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சரின் அண்ணன் மனைவி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். சுமார் 90 லட்சம் வரை செலவு செய்தும், அவர் வெற்றி பெறவில்லை. போட்டி வேட்பாளர் 70 லட்சம் வரை செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார்.

உள்ளூரில் அமைச்சர் தன் செல்வாக்கை நிலைநாட்ட முடியவில்லை. அதனால், மாவட்ட அரசியலில் தனது மகனை முன்னிறுத்தி செல்வாக்கை வளர்த்துக்கொள்ளப் பார்க்கிறார்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.