Advertisment

கமல் கூறுவதைப் போல அரசிடம் ஒரு சதவிகித குறை கூட இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ!

மதுரை வில்லாபுரம், தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளான அரிசி, காய்கறி, பலசரக்குப் பொருள்கள் அடங்கிய பைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்குகினார்.

Advertisment

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ,டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்குக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் பயிர்க்கடன் இல்லை என்ற நிலையே வராது. இந்த வருடம் விவசாயப் பயிர்க்கடன் 11 ஆயிரம் கோடி வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதுவரை 2,562 கோடி வழங்கப்பட்டுள்ளது.சென்ற வருடம் பயிர்க் கடன் வாங்கிய 85 சதவிகித விவசாயிகள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தி உள்ளார்கள்.

Advertisment

ஸ்டாலின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தினை நிறைவேற்றுகிறோம் எனக் கூறிய ஸ்டாலின் வீட்டிலேயே வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி பாதுகாப்பாக இருந்து விட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எந்த விஷயத்தைப் பாராட்ட வேண்டும் எந்த விஷயத்தை எதிர்க்க வேண்டும் எனத் தெரியாமல் இருக்கிறார்.

சென்னையிலிருந்து மதுரைக்குச் சாலை மார்க்கமாகவும் ரயில் மூலமாகவும் வரும் அனைவரும் பரிசோதிக்கப்படுகிறார்கள்.நடிகர் கமல் தன்னுடைய கட்சியில் இருக்கும் 100 நிர்வாகிகளைத் திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவே அரசைப் பற்றிக் குறை கூறிபேசுகிறார். இப்படி அரசைக் குறைகூறிப்பேசினால் தான் டி.வி.யில் அவரை காண்பிப்பார்கள். கமல் கூறுவதைப் போல அரசிடம் ஒரு சதவிகித குறை கூட இல்லை. அரசைக் குறை கூற கமலுக்கு யோக்கியதை இல்லை எனக் கூறினார்.

admk kamalhaasan MNM Sellur K. Raju
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe