விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரபாலாஜி கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அதிமுகவில் மீண்டும் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுகவின் ஓபிஎஸ் -ஈபிஎஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவரை நியமிக்கும் வரை ராஜேந்திரபாலாஜி பொறுப்பாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்கப்படுகிறது எனவும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.