ADVERTISEMENT

மூட்டை கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான்... எடப்பாடி யார் தெரியுமா? ராஜேந்திர பாலாஜி மீண்டும் அதிரடி பேச்சு!

11:26 AM Feb 14, 2020 | Anonymous (not verified)

அரசியலில் தங்களின் கருத்துக்களை சுதந்திரமாகவும் ஆவேசமாகவும் பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். அதில் அதிகம் விமர்சிக்கப்படுபவராக இருக்கிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! அதனால் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பொங்கியிருக்கிறார்கள் மூத்த அமைச்சர்கள். இந்த விவகாரம், அதிமுக மேலிடத்தில் ரணகளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ரஜினிக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய ராஜேந்திர பாலாஜி, திமுகவை தாக்குவதற்காக ஹிந்துக்களை ஆதரித்தும் முஸ்லீம்களை எதிர்த்தும் பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் முதல்வர் எடப்பாடி ராஜேந்திர பாலாஜி மீது கோபத்தில் இருப்பதாக பேசப்பட்டது.

ADVERTISEMENT



இந்த நிலையில், நாகைமாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று தனது பெற்றோருக்கு 80 வயது நிறைவடைந்ததை ஒட்டி யாகம்,மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, அப்போது டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளான் மையமாக ஆக்குவதாக ஒரு லட்சம் பேர் முன்னிலையில் முதல்வர் கூறியுள்ளார். அதிலிருந்து அவர் பின்வாங்க மாட்டார். இதை எப்படி சட்டமாக்குவது என்று யோசித்து, சட்டமாக்குவார். டெல்டாவில் இருந்து இனி ஒ.என்.சி.சி மூட்டை கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.கரிகாலனை பார்த்து இருக்கிறோம்.ராஜராஜ சோழனைப் பார்த்திருக்கிறோம்.இந்த திட்டத்தின் மூலம் முதல்வரை தமிழக மக்கள் நவீன ராஜராஜ சோழனாகப் பார்கிறார்கள் என்றும் பேசினார்.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT