Advertisment

சசிகலா சிறையில் இருப்பது வேதனை... அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி... அதிருப்தியில் அதிமுக தலைமை!

அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், `ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு போட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தை விதிகளின் படி சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய வழக்குகள் சசிகலா மீது போடப்படுவதால் அவர் வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

Advertisment

admk

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவின் பால்வளத்துறைஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியின் போது, சசிகலா சிறையில் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. விரைவில் சசிகலா விடுதலையாக பிராத்திக்கிறேன் என்றும், அவர் வெளியே வந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று பரபரப்பாக பேசியுள்ளார். அதிமுக அமைச்சரின் பேச்சால் அதிமுக தலைமை, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admk eps minister politics sasikala Speech
இதையும் படியுங்கள்
Subscribe