Skip to main content

வைகோவை புகழ்ந்த அதிமுக அமைச்சர்!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், அவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது திமுக தேசதுரோக வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் வைகோவிற்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 10ஆயிரம் ருபாய் அபராதமும் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 

admk



இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அரசுப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பள்ளி மாணவ மணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை  வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அப்போது செய்தியாளர் ஒருவர் வைகோவின் கைது குறித்து கேள்வி எழுப்பினார், அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நமது பகுதியை சேர்ந்தவர். சிறந்த போராளி, தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து பேசி வருபவர். அவரது பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என தெரிவித்த அவர் இது எனது தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்