Advertisment

“புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது” - ஓ.எஸ்.மணியன்

ADMK Minister OS Maniyan comments about tamilisai soundararajan

"புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவியேற்றிருக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது" என்று பேசியிருக்கிறார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

Advertisment

நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட 581 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை நாகை மற்றும் நாகூரில் நடைபெற்ற விழாக்களில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். பயனாளிகளுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisment

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஒ.எஸ்.மணியன், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைக்கப்பட வேண்டும் எனவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்ப்போம். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது. அவரை மத்திய அரசு நியமித்துள்ளது. அவரது செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Os Manian Tamilisai Soundararajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe