அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி!

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போட்ட ஊரடங்கு காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முடக்கப்பட்டிருப்பதும், துறைசெயலாளரான பீலா ராஜேஷுக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டிருப்பதும்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கரோனா நிலவரம் அறிவித்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இப்போது, ஏதாவது ஒரு மருத்துவமனையை ஆய்வு செய்வதுதான் ஊடகங்களில் வருகிறது. பெரும்பாலும் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையிலேயே இருக்கிறார் என்று சொல்கின்றனர்.

admk

இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, கரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான பர்சண்டேஜ் பிரச்சினையில்தான், முதல்வர் எடப்பாடிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையில் முதலில் உரசல் தீப்பொறி ஏற்பட்டது என்கின்றனர். இந்த நிலையில் கரோனா தடுப்புப்பணியில், விஜயபாஸ்கர் பம்பரமாகச் செயல்படுகிறார், அவரை ஏகத்துக்கும் பாராட்டி விளம்பர மீம்ஸ்கள் வெளியானதில் எடப்பாடி உள்பட சீனியர் அமைச்சர்கள் பலருக்கும் எரிச்சல். அதையடுத்துதான், அமைச்சர் ஓரங்கட்டப்பட்டு, சுகாதாரத்துறை செயலாளர் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்.

மேலும் விஜயபாஸ்கரை பொறுத்தவரை 25 எம்.ஏல்.ஏ.க்கள் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். அவங்களுக்கு மாதா மாதம் எனர்ஜி டானிக் கிடைத்துவிடுவதால், விஜயபாஸ்கர் கிழித்த கோட்டை அவர்கள் தாண்டமாட்டாங்க என்று சொல்கின்றனர். அந்த தைரியத்தில்தான், தற்போதும் ஆய்வுப் பணிகளில் ஜரூராக இருக்கிறார் என்கின்றனர். கரோனாவுக்காக அவசரமாகப் பணி நியமனம் செய்யப்பட்ட ஏறத்தாழ ஆயிரம் லேப் டெக்னீஷியன்களும், எங்களைச் சொந்த ஊர்களில் அப்பாயின்மெண்ட் போடுங்கள் என்று, விஜயபாஸ்கர் தரப்பை வெயிட்டாவே துரத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

admk

http://onelink.to/nknapp

அதோடு எடப்பாடி அரசால் ஓரங்கப்பட்டதாக அரசியலில் பரபரப்பாகப்பேசப்பட்டாலும், விஜயபாஸ்கருக்கு ஆதரவான பிரச்சாரங்களும் போஸ்டர்களும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் ’முதல்வர் பழனிசாமியே, பாஜகவுக்கு நன்றி விசுவாசம் செய்யும் நேரமா இது? கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பொறுப்பை மீண்டும் விஜய பாஸ்கருக்கு வழங்கிடு! பா.ஜ.க பொன்.ராதா கிருஷ்ணனின் உறவினரான பீலாவை டிஸ்மிஸ் செய்யின்னு’ போஸ்டர்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.உச்சகட்டமாக விஜயபாஸ்கரை முதல்வராக்குன்னும் அதிரடி கிளப்பியுள்ளார்கள். இது எடப்பாடித் தரப்புக்கு ஹை வோல்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், இந்தப் போஸ்டர்களின் பின்னணியில் இருப்பது யாருன்னு உளவுத் துறையை அவர் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.'

admk coronavirus eps minister politics vijayabaskar
இதையும் படியுங்கள்
Subscribe