திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் (அக்டோபர் 29) மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

admk

இந்நிலையில், முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க அதிமுக அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று என்று கூறினார். சுஜித் மீட்பு சம்பவத்தில் அதிமுகவை உலகமே பாராட்டி வரும் நிலையில் ஸ்டாலின் மட்டும் குறை சொல்கிறார் என்றால் அவரது கண்ணில் பார்வை இல்லை என்று தான் கூறவேண்டும். மேலும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க அதிமுக அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்று கூறியுள்ளார்.