நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் தனியார் கல்லூரியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய அவர், ஆட்சியாளர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார். என் ரசிகன் மீது கை வைக்காதீர்கள் என்று எச்சரிக்கையும் விடுத்தார். விஜய்யின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த நிலையில் பிகில் பட போஸ்டர் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதில் தல எப்படி இருக்குமோ அப்படிதான் வாலும் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் படத்தில் நடிகர் விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது. அதனையடுத்து நடிகர்கள் எம்.ஜி.ஆர். பாணியில் நடிக்க வேண்டும், மாறாக நடிகர்களின் திரைப்படங்களால் வன்முறை ஏற்பட கூடாது என்றும் கூறியுள்ளார். அதோடு மோசமான கருத்துக்கள், செயல்பாடுகள் திரைப்படங்களில் இடம்பெற கூடாது என்றும் கூறியுள்ளார்.