Advertisment

பசியோடு ரோட்டில் தனியாக இருந்த முதியவர்... ஐயா ரொம்ப பசிக்குது... அமைச்சர் ஜெயக்குமார் செய்த செயலால் குவியும் பாராட்டு!

கரோனா ஆட்கொல்லி வைரசானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளவில் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 42,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

admk

இந்த நிலையில், சென்னை துறைமுகம் பகுதியில் தனது காரில் வீட்டுக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் முதியவர் ஒருவர் உணவில்லாமல் தனியாக தவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தனது காரை நிறுத்தி கீழே இறங்கி வந்து முதியவருக்குச் சாப்பிட உணவும், செலவிற்குப் பணமும், பாதுகாப்பிற்காக மாஸ்க்கும் கொடுத்துள்ளார். அதன் பின்பு மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதியவர் குறித்த தகவலைத் தெரிவித்து காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார். பின்பு அந்த முதியவர் பெயர் திருநாவுக்கரசு என்றும், அவர் சென்னை ஐசிஎஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அமைச்சரின் இந்தச் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

coronavirus politics jayakumar minister admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe