Advertisment

எடப்பாடிக்கு நான் யாருன்னு காட்றேன்... கொந்தளிப்பில் இருக்கும் அதிமுக அமைச்சர்!

எதிர்கட்சிகளை சமாளிப்பதில் கைதேர்ந்தவரான முதல்வர் எடப்பாடிக்கு அவரோட அமைச்சரவையில் உள்ள ராஜேந்திர பாலாஜியுடன் உரசல் ஏற்பட்டுள்ளதாக சொல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, ஆவின் நிர்வாகம் நாள்தோறும் கொள்முதல் செய்ய்யும் பாலில், 7 ஆயிரம் லிட்டர் வரை உபரியாக மிஞ்சுவதாக கூறுகின்றனர். இந்த உபரிப் பாலை பால் பவுடராக மாற்றிவிடலாம் என்று அதிகாரிகள் சிலர் கூற, பவுடருக்கு மார்க்கெட் குறைவு என்று இன்னொரு தரப்பு அதிகாரிகள் சொல்லியிருப்பதாக கூறுகின்றனர். அதனால், உபரிப் பாலை வெளியே விற்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். இந்த உபரிப் பாலை நான் சொல்லும் நபர்களிடம் டெண்டர் விடுங்கள் என்று பால்வளத் துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, சுய லாபக் கணக்குப் போட்டு வலியுறுத்த ஆரம்பித்திருப்பதாக கூறுகின்றனர்.

Advertisment

admk

அவருக்கு இசைவாக இருந்த ஆவின் எம்.டி.யான காமராஜ் மாற்றப்பட்டு, இப்போது வந்திருக்கும் புதிய எம்.டி.யான வள்ளலாரோ, அமைச்சரின் முடிவை ஏற்க மறுத்ததோடு, அதை முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு போயிருப்பதாக கூறுகின்றனர். இதைக்கேட்டு கோபமடைந்த எடப்பாடியோ, திருட்டுப் பூனைகள் பாலைக் குடிச்சிடாமல் இ-டெண்டர் விட்டு விடுங்கள் என்று கறாராகச் சொல்லிவிட்டதாக கூறுகின்றனர். இதையறிந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடிக்கு எதிராக ருத்திர தாண்டவம் ஆடியதோடு, நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்னு நெருங்கிய வட்டாரங்களில் கூறிவருகிறார் என்கின்றனர்.

politics rajendrabalaji ops eps minister admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe