Advertisment

ஸ்டாலின் , தினகரனை சீண்டும் அதிமுக அமைச்சர்!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதா அரசை எப்படியாவது அகற்றி விட வேண்டும் என்று திமுகவும், அதனுடைய "பி" டீம் தினகரனும் சேர்ந்து பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர் அது எதுவும் நடக்கப் போவதில்லை என்று கூறினார்.எனவே இப்போது "ஏ" டீம் ஆக இருக்கின்ற திமுக தலைவர் ஸ்டாலின் B டீம் பாதிக்கப்பட்ட உடன் "பி" டீம்க்கு ஆதரவாக குரல் கொடுத்து மீண்டும் வந்து தனது சட்டையையும் பட்டனையும் கிழித்துக் கொண்டு வெளியே வருவதற்கு தயாராகி வருகிறார். அவருடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Advertisment

jayakumar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் பூஜ்ஜியம் ஆகிவிடுவார் என்றும் கலைஞராலேயே எங்கள் ஆட்சியை எதுவும் செய்ய முடியவில்லை இவர்கள் என்ன செய்துவிடுவார்கள் என்றும் பேசினார்.மேலும் திமுக ஆட்சி காலத்தில் எதிர்கட்சிகளை எந்தளவுக்கு நடத்தினார்கள் என்றும் அதே போல் எந்த அளவு ஜனநாயகப் படுகொலை செய்தார்கள் என்று வரலாறு மறந்திருக்காது என்றும் தெரிவித்தார்.அதோடு திமுகவை எந்த காலத்துக்கும் கோட்டை பக்கம் வர விடமாட்டோம் என்று ஜெயக்குமார் கூறினார்.

admk jayakumar stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe