Advertisment

அவரு என்ன பண்ணாரு... பொன்.ராதாகிருஷ்ணனை கடுமையாக விமர்சித்த அதிமுக அமைச்சர்!

தமிழகத்தில் வன்முறை பெருகிவிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கூறும் விதத்தில் பேசியுள்ளார். தமிழகத்தில் களியக்காவிளை பகுதியில் எஸ்.ஐ வில்சன் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த கருத்துக்கு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழக அரசை விமர்சித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

admk

இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு பதில் சொல்லும் வகையில் பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் 'பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேசமயம் அவர் கருத்தை பாஜகவின் கருத்தாக பார்ப்பதும் இல்லை. மத்திய அரசுதான் தமிழகம் சட்டம் ஒழுங்கில் முதல் இடத்தில் உள்ளதாக விருது கொடுத்துள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசையே எதிர்த்து கருத்து சொல்லியுள்ளாரா?' என கேள்வியெழுப்பியுள்ளார். அதோடு, பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு எந்த நலத்திட்டத்தையும் கொண்டு வரவில்லை எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Speech controversy minister admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe