சிவகங்கை மாவட்டம் இளையான் குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக கதர் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், "பா.ஜ.க. வுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம். தேசிய குடியுரிமைச் சட்டத்தை அமைச்சர்கள் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை' என பேசிய பேச்சு ஏகத்துக்கும் பரபரப்பை உருவாக்கியது. முதல்வர் எடப்பாடி உள்பட சீனியர் அமைச்சர்கள் பலரும் பதறிப்போன நிலையில் பாஸ்கரனை தொடர்புகொண்டு கோபம் காட்டியிருக்கிறார் எடப்பாடி.

admk

Advertisment

இதனையடுத்து, அ.தி.மு.க.-– பா.ஜ.க. கூட்டணி உறவு வலிமையாக இருக்கிறது என்கிற ரீதியில் பல்டி அடித்தார் பாஸ்கரன். பாஸ்கரன் தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற சசிகலாவின் சிபாரிசினால் அமைச்சராக்கினார் ஜெயலலிதா. இப்போதும் சிவகங்கை மாவட்டத்தில் மணல் உள்ளிட்ட பல்வேறு பிஸ்னெஸ்சில் பாஸ்கரனும் தினகரனும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். விரைவில் அமைச்சரவையை மாற்றியமைக்கவிருக்கும் எடப்பாடி, பாஸ்கரனை கழட்டிவிட திட்டமிட்டுள்ளார். அதனால் தினகரன் ஆலோசனைப்படி பாஸ்கரன் பேசியுள்ளாராம்.