Advertisment

திமுக எம்.எல்.ஏ கனவில் வந்த அதிமுக அமைச்சர்!

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஜூன் 28ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர். அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ், கஜா மற்றும் ஒக்கி புயலின் போது மின் ஊழியர்கள் மிக நன்றாக செயல்பட்டனர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Advertisment

admk

தொடர்ந்து பேசிய அன்பில் மகேஷ் , மின்துறை பற்றிய விவாதத்தை நான் இன்று பேச இருந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் என் கனவில் மின்துறை அமைச்சர் தங்கமணி தான் வந்தார். அப்போது அவர் என்னிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்தார் என கூறினார். பிறகு பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி ' நான் எப்போதும் சட்டப்பேரவையில் ஆக்ரோஷமாக பேசியது இல்லை என கூறினார். மேலும் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முதல்வர் பழனிசாமி அன்பில் மகேஷ் தன் தொகுதி பிரச்சனையை மட்டும் பேசி வருவார் ஆனால் தற்போது ஆரம்பத்திலே அமைச்சர் கனவில் வந்து ஆக்ரோஷமாக பேசினார் என கூறுவது எதோ உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது என கூறினார்.

Advertisment
admk eps minister MLA ops
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe