admk

Advertisment

எடப்பாடிக்கு எதிராக சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், வருவாய்த்துறை ஆர்.பி.உதயகுமார், பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி, கூட்டுறவுத்துறை செல்லூர் ராஜு உள்ளிட்ட 13 அமைச்சர்கள், துணை முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையில் தனி அணியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். சசிகலாவின் ரிலீசுக்காக இவர்கள் காத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளாட்சித்துறை வேலுமணியும், மீன்வளத்துறை ஜெயக்குமாரும் இருப்பதாகக் கூறிவருகின்றனர். மின்சாரத்துறை தங்கமணி, சட்டத்துறை சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கொண்ட ஒரு டீம், யார் கை ஓங்குகிறதோ அவர்களை சப்போர்ட் பண்ணலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில், தன்னை எதிர்ப்பவர்களை மிரட்டும் விதமாக, கரோனாவைச் சமாளிக்க அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்யப் போகிறேன். அதில் சிலபேர் வெளியேற்றப் படுவார்கள். சில பேர் புதிதாக உள்ளே வருவாங்கள் என்று அமைச்சர்களிடமே எடப்பாடி கூறிவருவதாகச் சொல்கின்றனர். இதற்கு அவரிடம் எந்த ரீயாக்ஷனையும் காட்டாத அமைச்சர்கள், எடப்பாடிக்குத்தைரியம் இருந்தால், எங்களை அமைச்சரவையில் இருந்து நீக்கிப் பார்க்கட்டும் என்று கோஷ்டி பூசலில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அப்செட்டில் இருப்பதாகச் சொல்கின்றனர்.