





சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க அவர் இன்று (16.03.2021) புதுக்கோட்டை வந்தார்.
சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலை மாற்றக் கோரி கடந்த ஒரு வாரமாகப் பல்வேறு இடங்களில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இன்று கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் பாலம் என்ற இடத்தில், சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர், வேட்பாளர் தர்ம.தங்கவேலை மாற்றக் கோரி எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுக்க பாண்டியன் தலைமையில் காத்திருந்தனர். இதனால், போலீசார் தடுப்புகளை வைத்துத் தடுத்தனர். அதன் காரணமாக, எடப்பாடி, திடீரென வழித்தடத்தை மாற்றலாம் என்ற நிலை உருவாகியிருந்தது. ஆனால், அவர் திட்டமிட்ட வழித்தடத்திலேயே பயணித்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பாண்டியன் தலைமையிலான தொண்டர்கள் நின்றுகொண்டிருந்த இடத்தில், எடப்படியின் வாகனம் நிற்காமல் சென்றது. இதனால், ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.