சுவாமிமலையில், முன்னாள் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோரை கண்டித்து அதிமுகவினர் விலகல் கடிதத்தை கொடுத்துவருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார் மற்றும் சங்கர் ஆகியோர் த.மா.கா.விலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதில் சங்கர் என்பவருக்கு கும்பகோணத்தில் உள்ள மத்திய மருத்துவ கூட்டுறவு சங்கத்திலும், சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலை நிறுவனத்திலும் இயக்குனர் பதவி வழங்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் மேலும், அவரது உறவினர் ஒருவருக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி வங்கியில் எழுத்தர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த அதிருப்திக்கு காரணம்.
கட்சியில் காலம்,காலமாக பணியாற்றும் எங்களை விட்டுவிட்டு இப்போது வந்தவர்களுக்கு பொறுப்புகளை வாரி வழங்கியுள்ளனர் என்றும், சுவாமிமலையில் அதிமுக நிர்வாகிகளாக இருக்கும் எங்களை கேட்காமல் எம்.பி. வைத்திலிங்கம், அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் பதவி வழங்கியுள்ளனர். இது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது என்றும் கூறிவருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அவர்களை கண்டித்து சுவாமிமலை நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் குடந்தை ஒன்றிய மாணவரணி துணை தலைவர் கல்யாணராமன் ஆகியோர் தலைமையில், வட்ட செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலமுருகன், வெங்கடேசன், திருமலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகல் கடிதத்தை நகர செயலாளர் ரங்கராஜனிடம் வழங்கினா். இதேபோல் நூற்றுக்கணக்கானோர் விலகல் கடித்தத்தை கொடுத்து வருகின்றனர்.