அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடந்தது. அதில், கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்தப் பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஒ.பி.எஸ். தரப்பு நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடியுள்ளார். இந்நிலையில், புரட்சி பாரத கட்சித் தலைவர் பூவை மூர்த்தி, கோகுல இந்திரா, நடிகை விந்தியா மற்றும் தொழிற்சங்கத்தினர் சென்னையில் உள்ள எடப்பாடியின் வீட்டிற்கு வந்து அவரைச் சந்தித்துவிட்டு சென்றனர். மேலும், சேலம் மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திருப்பதி கோயிலில் மொட்டை அடித்து நேரத்திகடன் செலுத்தி பிரசாதம் கொண்டு வந்து அவரைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி மரக்காணம் கிளம்பி சென்றார்.

Advertisment