Advertisment

கழகமே கோவில், அம்மாவே தெய்வம்! அதிமுக நடத்திய திருவிழா! (படங்கள்)

Advertisment

சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மணடபத்தில் அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று(24.11.2019)நடைபெற்றது. . அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 4500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர் செல்வத்தையும் வரவேற்பதற்காக வழிநெடுகிலும் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல இடங்களில் மேடை அமைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, சாலை ஓரங்களில் வாழைமர தோரணங்கள் வைக்கப்பட்டன, மிக பிரமாண்டமான தோரண வாயில்களும் அமைக்கப்பட்டிருந்தன. கோயில் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டு அதில் ஜெயலலிதா உருவம் வைக்கப்பட்டிருந்தது. மேள தாளங்கள் முழங்க அந்த இடமே திருவிழா போல காட்சியளித்தது.

ops Edappadi Palanisamy admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe