தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் தற்போது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Advertisment

admk manikandan removed from minister post

ராமநாதபுரத்திலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வான மணிகண்டன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் அரசு கேபிள் டிவி தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்ததால் இவரது பதவி பறிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இனி தகவல் தொழில்நுட்பத் துறையை கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment