admk leaders ops and eps statement

Advertisment

தொலைக்காட்சி மற்றும் சமூகத்தொடர் ஊடக விவாதங்களில் அ.தி.மு.க. இனி பங்கேற்காது என்று ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று (12/07/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர் ஊடக விவாதங்களில் அ.தி.மு.க. இனி பங்கேற்காது. அ.தி.மு.க. பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். வேறு யாரையும் அழைத்து அவர்களை அ.தி.மு.க. என்று அடையாளப்படுத்த வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.