admk leader natham viswanathan speech

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று (15/03/2021) நடைபெற்றது. இதில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஒன்றியங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் என 2,000 பேர் திரண்டிருந்தனர்.

கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழியை அறிமுகப்படுத்திப் பேசிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், "தேன்மொழி என்றாலே தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிடும். அதனால்தான் மு.க.ஸ்டாலின், யாரும் கேள்விப்பட்டிராத ஒரு கட்சிக்குத் தொகுதியை ஒதுக்கிக் கொடுத்துள்ளார். தேன்மொழி வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இரட்டை இலைக்கு ஒரு நாள் ஓட்டு போட்டீர்கள் என்றால், ஐந்தாண்டுகளுக்குசந்தோசமாக வாழலாம்" என்று கூறினார்.மேலும், அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாகப் பட்டியலிட்டார். இதனிடையே, அவர் பேசி முடிக்கும் முன்பே கட்சியின் 70% பேர் மண்டபத்தை விட்டு வெளியே சென்றுவிட்டனர்.