/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops213.jpg)
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று (27/03/2021) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகரிகமற்ற முறையில் தரக்குறைவாகப் பேசிய ஆ.ராசாவுக்கு அ.தி.மு.க. சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவி வெறியில் அவரது உளறல் மூலம் எந்த அளவிற்கு அவரும் தி.மு.க.வும் தரம் தாழ்ந்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops1211111.jpg)
தரக்குறைவான சொற்களால் வசைபாடுவதால் பேசப்படுபவர் ஒருபோதும் குறைந்து போவதாய் அர்த்தமல்ல. மாறாக அது பேசுபவருடைய அறிவீனத்தையே பிரதிபலிக்கும். மக்களின் பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர் சபை நாகரிகத்துடனும், அரசியல் மாண்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தனது சுய வாழ்வில் முதலில் தாம் சரியாக இருக்கிறோமா என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு பேசவேண்டும். இனியேனும் இப்படி தரமற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவரை கடுமையாக எச்சரிக்கிறேன்" இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)