Skip to main content

"ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

ADMK LEADER AND CM OF TAMILNADU EDAPPADI PALANISWAMI PRESSMEET

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூபாய் 1,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்" என்று வாக்குறுதி அளித்தார்.

 

மேலும் அவர் பேசும்போது, "அ.தி.மு.க. அறிவிக்க இருந்தது முன்கூட்டியே கசிந்துவிட்டதால் தி.மு.க. அதை அறிவித்துவிட்டது. அதிமுகவுடனான அமமுக இணைப்பு இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். அ.ம.மு.க.வில் இருந்து மேலும் பலர் அ.தி.மு.க.விற்கு வரவுள்ளனர். மார்ச் 12- ஆம் தேதிக்குள் முழுமையாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சிறுபான்மையின மக்களின் முழு ஆதரவு அ.தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு. தமிழ்நாட்டு மக்கள் அ.தி.மு.க. ஆட்சியே வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. அ.ம.மு.க.வில் இருந்து மேலும் பலர் அ.தி.மு.க.விற்கு வரவுள்ளனர்" என்றார்.

 

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர், துணை முதல்வருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராங்கி தொழில்நுட்பக் குழுவைப் பாராட்டித் தள்ளிய திரிஷா

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Trisha praise Raangi technical team

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு திரிஷாவின் சினிமா கிராஃப் மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து வெளியாக இருக்கிற ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை திரிஷா பேசியதாவது..

 

“ஒரு நடிகையாக நான் நடித்து முடித்து போய்விடுவேன். அதற்குப் பிறகு இந்தப் படம் வெளிவர உழைப்பது தொழில்நுட்பக் குழு தான். அவர்களுக்கு என் வாழ்த்துகள். என்னைப் பொறுத்தவரை இவர்கள் தான் ஒரு படம் சிறப்பாக அமைய முக்கியக் காரணமாகும். படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் இவர்களை வேலை வாங்குகிற இயக்குநர் ஆகியோரின் பங்களிப்பு மிக மிக முக்கியம்.

 

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி. நீங்க வாங்க, நாம பார்த்துக்கலாம் என்று தைரியமாக களம் இறக்கியவர் அவர்தான். ஸ்பாட்ல போயி தான் ரிகர்சலே பண்ணுவோம். ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தராமல் ரொம்ப ஜாலியாக இருந்ததற்கு காரணமே படப்பிடிப்பின் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர்கள் தான். இந்த நிகழ்விற்கு பல உதவி இயக்குநர்கள் வரல. ஆனால், பின்னால் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உழைப்பு அர்ப்பணிப்பு நிறைந்தது.” என்றெல்லாம் பாராட்டினார்.


 

Next Story

"இப்ப சின்ன இருமல்னா கூட, எனக்கு பெரிய செய்தி..." - நடிகர் கமல்ஹாசன்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

"Even if I have a small cough, I have big news..."- Actor Kamal Haasan Anguish!

 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'DSP' திரைப்படத்தின் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (25/11/2022) நடைபெற்றது. விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் வைபவ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், "சகோதரர் விஜய் சேதுபதியின்  'DSP'-க்காக இங்கு வந்திருக்கேன். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள். ட்ரைலர் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்துச்சி. விழாவின் போது சொன்னேன், முன்பெல்லாம் பெரிய விபத்து நேரும் போது கூட, அடுத்து எப்ப ஷூட்டிங் வரீங்கனு கேட்பாங்க. அடுத்தப் படம் எப்ப ரிலீஸ்னு கேட்பாங்க.

 

இப்ப சின்ன இருமல்னா கூட, எனக்கு பெரிய செய்திகள் எல்லாம் வந்துட்டு இருக்கு. அதற்குக் காரணம் ஒன்று ஊடகம், மற்றொன்று பெருகியிருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன். நன்றாக இருக்கிறேன். ‘இந்தியன் 2’ படத்துக்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது" எனத் தெரிவித்தார்.