publive-image

Advertisment

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுகவை பாஜக தனது கட்டுக்குள் வைத்துள்ளது. சுதந்திரமாக செயல்படாத கட்சி அதிமுக" என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா என்பவரது தாயாரின் படத்திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

publive-image

Advertisment

நிகழ்ச்சிக்கு பின் பேசிய திருமாவளவன், "ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தில் இருந்த அதிமுக, பாஜகவின் முழு கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பாஜக அதிமுகவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராக முடியாத நிலையில், இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ஒரு கிறிஸ்துவரை நிறுத்த வேண்டும்" என கூறினார்.