அரசு ஊழியர்களின் ஓய்வு வயது விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவால் ஏற்பட்ட சர்ச்சை... வெளிவந்த பின்னணி தகவல்!

admk

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58- இல் இருந்து 59 ஆக உயர்த்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர். தமிழக அரசு அறிவித்த இந்த அறிவிப்பால், பதவி உயர்வுக்குக் காத்திருந்த அரசு ஊழியர்களும், புதிய வேலை வாய்ப்புக்காகக் காத்திருந்த இளைஞர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். அதாவது, கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் வயது வரம்பு நீட்டிப்பு பொருந்தாது என்று சொல்கின்றனர்.

மேலும் மே கடைசியில் மட்டும் ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் ஓய்வு பெற இருந்தார்கள். இவர்களுக்குக் குறைந்தபட்சம் தலா 15 லட்சம் முதல் 40 லட்ச ரூபாய் வரை எடப்பாடி அரசு செட்டில்மெண்டு செய்தாக வேண்டும். அதாவது மொத்தமாக, ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய். இந்த நிதிச்சுமையில் இருந்து தப்பிக்கத்தான் இப்படியொரு திட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

admk employees eps government politics
இதையும் படியுங்கள்
Subscribe