பொதுக்குழு வழக்கு; விரைந்து முடிக்க ஈ.பி.எஸ். தரப்பு கோரிக்கை

admk general body meeting issue high court eps ops

அதிமுகவில் ஒற்றைத்தலைமைவேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுமற்றும் செயற்குழு கூட்டங்கள்நடைபெற்றன. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத்தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தின் பாதியில் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை மாதம் 11 ஆம் தேதிநடந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்குமாறு வழக்கு ஒன்றைத்தாக்கல் செய்தார். இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுகூட்டம் செல்லாது என்றுஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கைத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் இருவரும் நீதிபதி ஜெயச்சந்திரன்அளித்த தீர்ப்பு செல்லாது என்றும், ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனத்தீர்ப்பு அளித்தனர்.

admk general body meeting issue high court eps ops

இந்தத்தீர்ப்பை எதிர்த்துஓ.பன்னீர்செல்வம்டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுவழக்கு ஒன்றைத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வரும் வேளையில், நேற்று எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்.தேர்தல்ஆணையத்தின் செயல்பாட்டால்கட்சி செயல்பட முடியாத நிலை உள்ளது. எனவே இடைக்காலத்தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார். அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்தவழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கைஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கைடிசம்பர் மாதம் 12 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

admk ops_eps supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe