Advertisment

அதிமுகவில் இருந்து விலகுகிறேன்... எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த மாஜி

மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் 125, எதிர்ப்பு வாக்குகள் 105. அ.தி.மு.க.வின் 11 வாக்குகளும் எதிர்த்து அளிக்கப்பட்டிருந்தால் சட்டத் திருத்தம் நிறைவேறி இருக்காது. அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததை கண்டித்து அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நயினா முகமது அக்கட்சியில் இருந்து விகியுள்ளார்.

Advertisment

eps

தனது முகநூல் பக்கத்தில் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் செய்தியாளர்கிளிடம்‘ அதிமுகவின் செய்ல்பாடுகள் அனைத்தும், மத்திய மதவாத அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறது. மேலும் சமீபத்தில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகமத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அந்த சட்டத்தை நிறைவேற்ற அதிமுக எம்பிக்கள் ஆதரித்து வாக்களித்ததை கண்டித்து அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ நயினா முகமது கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளதால், மேலும் பல இஸ்லாமியர்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால், மேலும் பல இஸ்லாமியர்கள் கட்சியை விட்டு சென்றுவிடுவார்களா? உள்ளாட்சித் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

Advertisment

நயினா முகமது கடையநல்லூர் எம்எல்ஏவாக 1996 முதல் 2001 வரை இருந்தார். 2004ல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக பதவி வகித்து வந்தார்.

shock Edappadi Palanisamy MLA admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe